ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட்டின் முன்னணி நடிகரும், வசூல் ‛கிங்'-ஆன சல்மான், 50வயதை தாண்டியும் இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கிறார். அவருக்கு எப்போது திருமணம் நடக்கும் என்பது மில்லியன் டாலர் கேள்வியாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் சல்மான் கானுக்கு திருமணம் ஆகிவிட்டதாக ரோமானியாவை சேர்ந்த ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
சல்மான் உடன் பல நடிகைகள் காதல் கிசுகிசுவில் சிக்கினர். தற்போது அவர் ரோமானியாவை சேர்ந்த லூலியா வந்தூர் என்பவரை காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இருவரும் பல இடங்களில் ஒன்றாக சுற்றி வந்த போட்டோக்கள் எல்லாம் வெளியானது.
இந்நிலையில் ரோமானியை சேர்ந்த செய்தி ஊடகம் ஒன்று சல்மான் கானுக்கும், லூலியாவிற்கு திருமணம் ஆகிவிட்டதாக செய்தி வெளியிட்டுள்ளது. அந்நாட்டு ஊடக செய்தியின் தலைப்பில் ‛டோ ஆம்னா கான்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியென்றால் ‛ராயல் மிஸஸ் கான்' என்று அர்த்தமாம்.
இதனால் தற்போது பாலிவுட்டில் சல்மானின் திருமணம் பற்றிய செய்தியே ஹாட் டாப்பிக்காக பேசிக்கொண்டிருக்கிறார்கள்.