ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நந்தா லவ்ஸ் நந்திதா என்ற கன்னட படத்தில் அறிமுகமானவர் நந்திதா. அதையடுத்து தமிழில் அட்டகத்தி படத்தில் நடித்தவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து பேசப்படும் நடிகையாகி விட்டார். கடைசியாக அவர் நடித்து வெளியான உப்புக்கருவாடு, அஞ்சல போன்ற படங்கள் தோல்வியாக அமைந்த நிலையில், தற்போது நெஞ்சம் மறப்பதில்லை, உள்குத்து, இடம் பொருள் ஏவல், காத்திருப்போர் பட்டியல் ஆகிய படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இதற்கிடையே இதுவரை தெலுங்கில் நடிக்காத நந்திதா, இப்போது ஒரு படத்தில் நடித் துக்கொண்டிருக்கிறார்.
ஆனால், தனது தாய்மொழியான கன்னட சினிமாவில் இருந்து சில வாய்ப்புகள் வந்தும் அவர் அந்த படங்களை ஏற்றுக்கொள்ளவில்லையாம். அதற்கு முக்கிய காரணம் அங்கு அவருக்கு மிகக்குறைவான சம்பளம் தரவே முன்வருகிறார்களாம். கன்னட சினிமாவைப்பொறுத்தவரை முன்னணி நடிகைகளுக்கே அதிகபட்சமாக ரூ. 25 லட்சம்தான் கொடுப்பார்களாம். ஆனால் நந்திதா அங்கு பிரபல நடிகை இல்லை என்பதால் சில லட்சங்களையே தர முன்வருகிறார்களாம். அதன்காரணமாவே தேடிவந்த கன்னட படவாய்ப்புகளை கால்சீட் இல்லை என்று சொல்லி திருப்பி அனுப்பி விட்டாராம் நந்திதா.