14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
ஹாலிவுட்டில் தான் தங்களது படங்களை புரமோட் பண்ணுவதற்காக படத்தின் பெயரிலோ அல்லது அந்தபடத்தின் கதநாயகன் பெயரிலோ வீடியோ கேம் வெளியிடுவார்கள்.. சமீபகாலமாக ஹாலிவுட் படங்களை போல் இந்திய சினிமாவிலும் 'கேம்' உருவாக்கி வெளியிடுகின்றனர். முதலில் பாலிவுட்டில் இந்த சிஸ்டம் அறிமுகமானது.. அதை தொடர்ந்து தமிழ் சினிமாவிலும் கோச்சடையான், அஞ்சான், கத்தி... என சில படங்களுக்கு இப்படி அனிமேஷன் கேம் வெளியிட்டார்கள்.
இப்போது இந்த அனிமேஷன் கேம் மோகம் மலையாள சினிமாவையும் தொற்றிக்கொண்டுள்ளது. அங்கே முதன்முதலாக இப்படி கேம் நாயகனாக மாறப்போவது துல்கர் சல்மானோ, பிருத்விராஜோ அல்ல... சாட்சாத் சூப்பஸ்டார் மோகன்லாலே தான். தற்போது மெகா பட்ஜெட்டில் அவர் நடித்துவரும் படமான 'புலி' முருகன்' படத்திற்குத்தான் அதேபெயரிலேயே 3டி கேம் ஒன்று தயாராகி வருகிறது. வைசாக் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தில் கமாலினி முகர்ஜி, நமீதா, பிரபு, ஜெகபதிபாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். படம் வரும் அக்-7ஆம் தேதி வெளியாக இருக்கிறது.