அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா |
திரை உலக பிரபலங்கள் திரைப்படங்களில் வரும் வருமானம் போக ரியல் எஸ்டேட், ஹோட்டல், திருமண மண்டபம் என பலவித தொழில்களையும் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் திரைப்படங்களில் நடிப்பது படங்களை தயாரிப்பது என பிசியாக இருக்கும் டோலிவுட்டின் ஸ்டைல் நாயகன் அல்லு அர்ஜூன், சொகுசு வசதிகள் கொண்ட நைட்கிளப் ஒன்றை ஐதரபாத்தில் நிறுவ உள்ளார். அல்லு அர்ஜூன் எம்கிட்சன், ஹைலைஃப் எனும் நிறுவனங்களுடன் இணைந்து “800 ஜூப்ளி நைட் கிளப்” எனும் நைட் கிளப்பை ஐதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் துவங்கவுள்ளாராம். ஜூலை 29ல் இந்த நைட் கிளப் துவங்கப்படவுள்ளது. இதன் துவக்கவிழாவிற்கு தெலுங்கு திரை உலகின் பிரபலங்கள் பலரை அழைத்து வெகு விமர்சையாக நடத்த அல்லு அர்ஜூன் திட்டமிட்டுள்ளாராம். பிரபல தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பில் இயக்குனர் ஹரீஷ் சங்கர் இயக்கவிருக்கும் படத்தில் அல்லு அர்ஜூன் அடுத்ததாக நடிக்கவுள்ளார்.