ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
துளசி, லக்ஷ்மி போன்ற வெற்றிப் படங்களுக்கு பின்னர் மூன்றாவது முறையாக வெங்கடேஷ் நயன்தாராவுடன் இணைந்து நடித்துள்ள பாபு பங்காராம் படத்தை இயக்குனர் மாருதி இயக்கியுள்ளார். இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீடு நேற்று இரவு நடைபெற்றது. முதலில் ஜூலை 9ல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்ட பாபு பங்காராம் பாடல்கள் நேற்று(ஜூலை 24) வெளியிடப்பட்டது.
விழாவில் பேசிய வெங்கடேஷ், இயக்குனர் மாருதி இப்படத்தின் வாயிலாக மேலும் 15 வருடங்கள் ஹீரோவாக நடிக்கும் உத்வேகத்தை தனக்கு கொடுத்துள்ளதாகக் கூறினார். மேலும் தனது மகன் ஹீரோவாக அறிமுகமாகும் வரை தான் ஹீரோவாக நடிப்பேன் என்றும் வெங்கடேஷ் கூறினார்.
1986ல் தெலுங்கு திரை உலகில் நாயகனாக நுழைந்த வெங்கடேஷ் 65க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பாபு பங்காராம் வெங்கடேஷின் 70வது திரைப்படமாகும் 30 வருடங்களை வெற்றிகரமாக திரை உலகில் கடந்த வெங்கடேஷ் தனது ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்தார். பாபு பங்காராம் திரைப்படம் ஆகஸ்ட் 12ல் திரைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.