14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
கோகுலம் படத்தில் தமிழுக்கு வந்தவர் மலையாள நடிகர் ஜெயராம். அதையடுத்து புருசலட்சணம், பிரியங்கா, முறைமாமன், தெனாலி, பஞ்சதந்திரம், சரோஜா, ஏகன், துப்பாக்கி, துணை முதல்வர், உத்தமவில்லன் உள்பட சுமார் 30 தமிழ்ப் படங்களில் அவர் நடித்திருக்கிறார். மலையாளத்தில் இப்போதும் வித்தியாசமான கேரக்டர்களில் நடித்து வரும் ஜெயராம், இதுவரை தமிழ், மலையாளம் படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். இப்போது முதன்முறையாக அவர் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கயிருப்பதாக தனது இணைய பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளார்.
அப்படி ஜெயராம் தெலுங்கில் நடிக்கும் முதல் படம் அனுஷ்கா லீடு ரோலில் நடிக்கும் பாகுமதி படமாம். இந்த படத்தில், ஜெயராம் ஒரு அரசியல்வாதி கெட்டப்பில் நடிக்கிறார். அந்த கெட்டப்பில் தான் பெரிய மீசை, தாடி கெட்டப்பில் எடுத்துக்கொண்ட போட்டோவையும் வெளியிட்டுள்ளார் ஜெயராம். அதைப்பார்க்கையில் ஒரு அதிரடியான அரசியல்வாதியாக பாகுமதி படத்தில் ஜெயராம் நடிப்பதாக தெரிகிறது.