பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
வட அமெரிக்காவுக்கும் மலையாள சினிமாவுக்கும் என்ன சம்பந்தம் இருக்கப்போகிறது என குழம்பவேண்டாம்.. நார்த் அமெரிக்கா பிலிம் அவார்ட்ஸ் (NAFA) என்கிற விருதுகள் வருடந்தோறும் வெளியாகும் சிறந்த மலையாள சினிமாவுக்கும், அதில் பங்குபெற்ற சிறந்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் வழங்கப்பட்டு வருகின்றன.. அந்தவகையில் இந்த வருடத்திய விருதுகளில் எட்டு விருதுகளை துல்கர் சல்மான் நடித்த 'சார்லி' படம் தட்டிச்சென்றுள்ளது.. தேசிய விருது, கேரள அரசு விருது, பிலிம்பேர் விருது உட்பட பல விருதுகளை நிறைய பிரிவுகளில் பெற்ற சார்லி' படத்துக்கு இது மேலும் ஒரு அங்கீகாரமாக கருதப்படுகிறது..
இந்த எட்டு விருதுகளும், நாயகன் நாயகியாக நடித்து துல்கர் சல்மான், பார்வதி, இசையமைப்பாளரான கோபிசுந்தர், ஒளிப்பதிவாளர் ஜோமோன் டி.ஜான், பின்னணி பாடகரான விஜய் ஜேசுதாஸ், பின்னணி பாடகி திவ்யா எஸ்.மேனன், கதாசிரியர் ஆர்.உன்னி, நகைச்சுவை நடிகர் ஜோஜு ஜார்ஜ் ஆகியோருக்கு வழங்கப்பட இருக்கின்றன. இந்த விருது வழங்கும் விழா வரும் ஜூலை-24ஆம் தேதி நியூயார்க் நகரத்தில் நடைபெற இருக்கிறது.