ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சர்ச்சைகளுக்கு மத்தியில் சூப்பர் ஹிட் அடித்த கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக் கத்திலான்டோடு என்ற பெயரில் உருவாகி வருகின்றது. டோலிவுட்டின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி இரட்டை வேடங்களில் நடிக்கும் இப்படத்தை இயக்குனர் விவி விநாயக் இயக்குகின்றார். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்புகள் நடைபெற்று வரும் நிலையில் மறுபக்கம் இப்படத்தில் வில்லனுக்கான தேடலில் படக்குழு இறங்கியுள்ளது. பிரபல வில்லன் நடிகர் ஜெகபதி பாபு கத்திலான்டோடு படத்தில் வில்லனாக நடிப்பதாக தகவல்கள் வெளிவந்தன, ஆனால் இவற்றை வதந்தி என படக்குழு மறுத்து விட்டது. இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தை லைக்கா புரொடக்ஷன் ராம் சரணுடன் இணைந்து தயாரிக்கின்றது. சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கும் நாயகியும் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.