ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகை தேவயானியின் தம்பி நகுல், ஷங்கரின் 'பாய்ஸ்' படத்தில் குண்டு பையனாக அறிமுகமானார். அதன் பிறகு 5 ஆண்டுகள் எங்கிருந்தார் என்றே தெரியவில்லை. திடீரென உடம்பை ஸ்லிம்மாக்கி 'காதலில் விழுந்தேன்' படத்தில் ரீ எண்ட்ரி கொடுத்தார். அந்தப் படம் பாடலுக்காகவே ஓடியது. அதன் பிறகு நடித்த மாசிலாமணி, கந்தகோட்டை சுமாராக போனது. மிகவும் எதிர்பார்த்த 'வல்லினம்' உள்பட எந்த படமும் அவருக்கு சரியாக அமையவில்லை. அவர் நடித்த 'அமளி துமளி' படம் டிராப் ஆனது.
இந்த நிலையில் அவர் தற்போது 'செய்' படத்தில் நடித்து வருகிறார். பாலிவுட்டிலிருந்து இறக்குமதியாகியிருக்கும் அஞ்சல் நாயகியாக நடிக்கிறார். இவர்கள் தவிர பிரகாஷ்ராஜ், நாசர் முக்கிய கேரக்டாதில் நடிக்கிறார்கள். நிக்ஸ் லோப்ஸ் இசை அமைக்கிறார், விஜய் உலகநாதன் ஒளிப்பதிவு செய்கிறார், ராஜ்பாபு இயக்குகிறார். படப்பிடிப்புகள் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. ஒவ்வொரு படத்திலும் நகுல் கடுமையாகத்தான் உழைக்கிறார். ஆனால் அதற்கான பலன் அவருக்கு கிடைக்காமல் உள்ளது. 'செய்' படத்திலாவது வெற்றியை செய்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.