விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
நடிகை ஜெனிலியா, நடிகர் ரிதேஷ் தேஷ்முக் ஜோடிகளின் திருமணம் அடுத்த ஆண்டு நடைபெறவிருப்பது உறுதியாகியுள்ளது. ஜெனிலியா - ரிதேஷ் காதலை மணமகன் வீட்டார் ஏற்றுக் கொண்டதற்கு அடையாளமாக, இரண்டு புதிய படங்களில் இருவரும் இணைந்து நடிக்க சம்மதம் தந்துள்ளார்களாம். இந்திரகுமாரின் மஸ்தி 2 மற்றும் புது இயக்குநர் மன்தீப் குமார் இயக்கும் புதிய படங்களில் ஜெனிலியாவும் ரிதேஷும் ஜோடியாக நடிக்கின்றனர்.
இருவரும் சேர்ந்து நடித்த முதல் படமான துஜே மேரி கஸம் 2003ல் வெளியானது. அப்போதே இருவருக்கும் காதல் என்று செய்தி வெளியானது. இருவரும் கோவா சர்ச்சில் திருமணம் செய்ய திட்டமிட்டு, அதை அன்றைய மராட்டிய முதல்வராக இருந்த விலாஸ்ராவ் தேஷ்முக் (ரிதேஷின் தந்தை) தடுத்துவிட்டதும் நினைவிருக்கலாம். இப்போது, ஒரு வழியாக மணமகன் வீட்டுத் தரப்பில் சமாதானமாகி திருமண தேதியை அறிவிக்கவும் தயாராகிவிட்டார்களாம். இதன் முதல்படிதான் புதிய படங்கள் இரண்டில் இருவரும் இணைந்து நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளனராம். விலாஸ்ராவ் தேஷ்முக் வீட்டுக்கு மருமகளாக ஒரு நடிகை வருவது இது முதல்முறையல்ல. ஏற்கெனவே ரிதேஷின் அண்ணன் அமித் ஒரு டிவி நடிகையைத்தான் திருமணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.