14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
மலையாள சினிமாவில் பெரும்பாலும் மனோவசிய மருத்துவர் கதாபாத்திரம் வெகு குறைவாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. மலையாளம் மட்டுமல்ல, எந் மொழியிலும் அந்த கேரக்டரை பயன்படுத்துவதற்கேற்ற கதைக்களங்கள் அமைவதோ, அமைப்பதோ மிகவும் கடினமான ஒன்று. ஷங்கர் இயக்கத்தில் அந்நியனில் ஹிப்னாடிச ஸ்பெஷலிஸ்ட்டான நாசர் கதாபாத்திரம் கூட சில நிமிடங்கள் வந்துபோகும் விதமாகத்தான் உருவாக்கப்பட்டிருந்தது. ஆனால் மலையாளத்தில் இப்போது முதன்முறையாக ஹிப்னாடிசத்தை மையப்படுத்தி 'பிரேதம்' என்கிற முழு நீள படமே உருவாகி வருகிறது..
மம்முட்டி நடித்த 'வர்ஷம்' படத்தை இயக்கிய ரஞ்சித் ஷங்கர் தான் இந்தப்படத்தை இயக்குகிறார் என்பதையும் இதில் ஜெயசூர்யா நடிக்கிறார் என்பதையும் ஏற்கனவே சொல்லியிருந்தோம்.. இதில் ஹிப்னாடிச மருத்துவராக நடிக்கிறார் ஜெயசூர்யா. மர்மங்கள் நிறைந்த அவரது கேரக்டரின் பெயர் ஜான் டான்பாஸ்கோ. இந்தப்படத்திற்காக மொட்டை வேறு அடித்திருக்கிறார் ஜெயசூர்யா. 'புண்யாலன் அகர்பத்தீஸ்' மற்றும் பெரிதும் பாராட்டப்பட்ட 'சு சு சுதி வால்மீகம்' ஆகிய படங்களை தொடர்ந்து ரஞ்சித் ஷங்கர்-ஜெயசூர்யா கூட்டணி சேரும் மூன்றாவது படம் என்பதால் இந்தப்படத்திற்கான எதிர்பார்ப்பு இன்னும் கூடுதலாகி உள்ளது.