Advertisement

சிறப்புச்செய்திகள்

14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

விலகிய மம்முட்டி.. விடாத நயன்தாரா. ; பிலிம்பேர் விழாவில் ஷாக்...!

20 ஜூன், 2016 - 10:06 IST
எழுத்தின் அளவு:
mammootty-neglected-nayanthara

பொதுவாக நடிகர் நடிகைகள் மற்றும் சினிமா பிரபலங்கள் ஏதாவது விழாக்களில் சந்தித்துக்கொள்ளும்போது அது யார் சீனியர் ஜூனியராக இருந்தாலும் சரி, பாலிவுட்டாக இருந்தால் பாசமாக மெலிதாக கட்டியணைத்து தங்களது அன்பை பரிமாறிக்கொள்வார்கள். நம் தமிழ் சினிமாவிலும் இளைய தலைமுறை நட்சத்திரங்கள் அந்த வழக்கத்தை கடைபிடிக்க ஆரம்பித்து விட்டார்கள். ஆனாலும் இன்னும் சில நடிகர்களோ, நடிகைகளே வான்டட் ஆக வந்து கட்டியணைத்தால், அவ்வளவு ஏன் கை கொடுத்தால் கூட, நாசூக்காக அதை தவிர்த்து கையெடுத்து கும்பிடும் பழக்கத்தை கடைபிடித்து வருகிறார்கள்.

மலையாள சினிமாவின் மெகாஸ்டார் மம்முட்டி நேற்று முன்தினம் ஹைதராபாத்தில் நடைபெற்ற 63வது பிலிம்பேர் விருது வழங்கும் விழாவில் நடந்துகொண்டதை பார்க்கும்போது அப்படித்தான் நினைக்க தோன்றுகிறது. இந்த விழாவில் கலந்துகொண்ட மம்முட்டி தனது இருக்கையில் அமர்ந்திருந்தார்.. அருகிலேயே ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி அவர் அருகில் நிவின்பாலி ஆகியோர் அமர்ந்திருந்தனர்.. அப்போது அரங்கத்திற்கு வந்திருந்த நயன்தாரா புன்னகையுடன் மம்முட்டியின் அருகில் சென்று அவருக்கு வாழ்த்துச்சொல்லி கைகுலுக்குவதற்காக கையை நீட்டினார்.


ஆனால் சீரியஸ் முகமாக இருந்த மம்முட்டி, பதிலுக்கு கைகளை நீட்டாமல் கையெடுத்து கும்பிட்டுள்ளார். இருந்தாலும் விடாத நயன்தாரா, மம்முட்டியின் கைகளைப்பற்றி குலுக்கி வாழ்த்து தெரிவித்து விட்டுத்தான் தனது இருக்கைக்கு சென்றார். ஒருபக்கம் மம்முட்டியின் இந்த செயல் அவர் மீதான மரியாதையை அதிகப்படுத்தினாலும், நயன்தாரா கைநீட்டியதுமே அவர் கையைப்பற்றி குலுக்கியிருக்கலாம் என்றே தோன்றுகிறது. கடந்த வருடம் 'பாஸ்கர் தி ராஸ்கல்' இந்த வருடம் 'புதிய நியமம்' ஆகிய படங்களில் நயன்தாரா மம்முட்டியுடன் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in