ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
மிருகம், ஈரம் படங்களில் நடித்த ஆதியின் மார்க்கெட் அரவாண் படத்தில் தோல்வியினால் வீழ்ச்சி கண்டது. அதனால் சில ஆண்டுகள் காணாமல் போயிருந்தவர், தனது அண்ணன் சத்ய பிரபாஸ் இயக்கிய யாகவராயினும் நாகாக்க படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்தார். ஆனால் பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட அந்த படம் தோல்வியடைந்தது. அதனால் ஆதிக்கு தமிழில் புதிய படமில்லை. அதையடுத்து தெலுங்கிற்கு சென்று சில படங்களில் வில்லனாக நடித்தவர், இப்போதும் சில படங்களில் வில்லனாக நடித்து வருகிறார்.
ஆனால் தமிழில் சரவணன் இயக்கும் புதிய படத்தில் இப்போது அவர் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்த படத்தில் யாகவராயினும் நாகாக்க படத்தில் ஆதிக்கு ஜோடியாக நடித்த நிக்கி கல்ராணியே மீண்டும் ஜோடியாகியிருக்கிறார். இந்த படம் காமெடி பேய் கதையில் உருவாகிறது. ஏற்கனவே ஜி.வி.பிரகாஷ் நடித்த டார்லிங் படத்தில் அதிரடி பேயாக நடித்த நிக்கி கல்ராணிக்கு இந்த படத்தில் பேயைக்கண்டு அஞ்சி நடுநடுங்கும் வேடமாம். டார்லிங்கில் அவர் நடித்தது போன்ற ஒரு பயங்கரமான பேய்தான் இந்த படத்தில் நிக்கி கல்ராணியை மிரட்டுகிறதாம்.