ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
திருமணத்திற்குப்பின் நடிப்பதை வெகுவாக குறைத்துக்கொண்டார் அமலாபால். அமலாபாலின் புகுந்த வீட்டினர் அவர் நடிப்பதை விரும்பவில்லை என்றாலும், அவரது காதல் கணவர் விஜய் அமலாபாலுக்கு பச்சைக்கொடி காட்டினார். இந்தநிலையில் தான் பாண்டிராஜின் இயக்கத்தில் 'பசங்க-2' படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு வந்தது.. நல்ல ஸ்க்ரிப்ட் என்பதால் அதில் நடித்துக்கொடுத்தார். இன்னொருபக்கம், கடந்த வருட ஆரம்பத்தில் அமலாபால் நடித்து மலையாளத்தில் வெளியான 'மிலி' படம் நல்ல வரவேற்பை பெற்றதால் அங்கேயும் வாய்ப்புகள் தொடர்ந்துவர, அவற்றை பெரும்பாலும் தவிர்த்தே வந்தார் அமலாபால். இடையில் '2 பெண்குட்டிகள் என்கிற குழந்தைகள் சப்ஜெக்ட்டை கொண்ட ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடித்தார்.
இந்தநிலையில் குஞ்சாக்கோ போபன் ஜோடியாக ஒரு மலையாளப்படத்தில் அமலாபால் நடித்து வருகிறார் என செய்தி வெளியானது.. ஆனால் அதுபற்றி எந்த தகவலும் உறுதிப்படுத்தப்படாமல் தான் இருந்து வந்தது. ஆனால் இப்போது அது உண்மை என்பதும் 'ஷாஜகானும் பரீக்குட்டியும்' என்கிற படத்தில் கதாநாயகியாக அவர் நடித்துள்ளார் என்பதையும் இன்று வெளியான அந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் உறுதிப்படுத்திவிட்டது.. போபன் சாமுவேல் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தில் குஞ்சாக்கோ போபன், ஜெயசூர்யா என இரண்டு ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார் அமலாபால். பர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்க்கும்போது இது ஒரு முக்கோண காதல் கதையாக இருக்கலாம் என்றே தெரிகிறது. ஜூலை-6ஆம் தேதி இந்தப்படம் ரிலீஸாக இருக்கிறது.