ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலிவுட்டின் முன்னாள் கனவு கன்னி ஹேமமாலினி, பாலகிருஷ்ணாவின் 100வது படத்தில் நடிக்கவுள்ளார். வரலாற்று திரைப்படமான பாலகிருஷ்ணாவின் 100வது படத்தை இயக்குனர் கிரிஷ் இயக்கவுள்ளார். இப்படத்தில் ராஜமாதா வேடத்தில் நடிக்க ஹேமமாலினியிடம் படக்குழுவினர் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் ஹேமமாலினி இப்படத்தில் நடிக்க ரூ 2 கோடி சம்பளம் கேட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. கௌதமிபுத்திர சதர்கனி என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகை நயன்தாராவை நாயகியாக நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு துவங்கி தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றது. பஸ்ட் பிரேம் என்டர்டையின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் ராஜிவ் ரெட்டி தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கின்றார். 2017 பொங்கல் பண்டிகைக்கு இப்படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.