ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், ஜூனியர் என்.டி.ஆருடன் இணைந்து நடித்து வரும் ஜனதா கேரேஜ் படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளிவந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இயக்குனர் கொரட்டாலா சிவா இயக்கும் ஜனதா கேரேஜ் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை(மே 24) துவங்கி சில வாரங்கள் சென்னையில் நடைபெறும் இப்படப்பிடிப்பில் சில முக்கிய காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாம்.
ஐ..ஐ.டி மாணவன், மெக்கானிக் என இரு வேறு வேடங்களில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் ஜனதா கேரேஜ் படத்தில் அவருக்கு ஜோடியாக நித்யா மேனன், சமந்தா என இரண்டு நாயகிகள் நடிக்கின்றனர். நித்யா மேனன் பிளாஸ்பேக்கில் ஜூனியர் என்.டி.ஆரின் காதலியாக நடிக்கின்றாராம். மைத்திரி மூவீஸ் தயாரிக்கும் இப்படத்தை ஆகஸ்ட் 12ல் திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது.