Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழகத்தில் சம்பாதிப்பதால் தமிழர்களுக்கு உதவுகிறேன்: ஸ்ரீதிவ்யா

20 மே, 2016 - 07:42 IST
எழுத்தின் அளவு:
helping-tamilans:-Sri-Divya

வெற்றி பெற்ற படங்களில் ஸ்ரீதிவ்யா இருக்கிறார்; இவர் நடித்தால், படம் ஓடும் என்ற ராசியும் உள்ளது. ரொம்ப யதார்த்தமாக, முகத்துக்கு கூட மேக்-அப் இல்லாமல் நடிக்கும் நடிகை இவர். அவருடன் ஒரு பேட்டி:


மருது படத்தில் உங்க ரோல்?


என்னோட ரோல், இந்த படத்தில வித்தியாசமாக இருக்கும். ரொம்ப தைரியசாலி; துணிச்சலா பேசுவேன். கிட்டத்தட்ட ஒரு ஆம்பளை மாதிரியான ரோல். என்னை நம்பி, இப்படிப்பட்ட ரோல் கொடுத்ததற்கு, இயக்குனர் முத்தையாவுக்கும், விஷாலுக்கும் நன்றி.


விஷால் கூட நடிக்கும் போது, உயரம், கலர் பிரச்னை இருந்திருக்குமே; எப்படி சமாளிச்சீங்க?


ஸ்டூல் போட்டு அப்படி இப்படி சமாளித்து விட்டேன். ஒளிப்பதிவாளரும் உதவினார்.


கிராமம், நகரம். எந்த மாதிரியான கதைக்களம் உங்களுக்கு பிடிக்கிறது?


மருது படத்தின் கதை ரொம்ப பிடித்திருக்கிறது. ஒரு வீட்டில் நடக்கும் கதை. இது, எனக்கு புது அனுபவமாக இருந்தது. ஆனால், மதுரை பாஷை, பேசி நடிப்பதற்கு தான், சிரமப்பட்டேன்.


ஒரே மாதிரியான படங்களில் நடிப்பது போரடிக்கவில்லையா?


இந்த படத்தில் கிடைத்த மாதிரி, மற்ற படங்களில் எனக்கு பலமான ரோல் அமையவில்லை என்பது தான் உண்மை. இந்த படம் வந்ததும், இயக்குனர்களுக்கு என் மீது நம்பிக்கை வரும். அதற்கு பின், எனக்கு நல்ல ரோலாக கிடைக்கும் என நம்புகிறேன்.


சிவகார்த்திகேயனுடன் இரண்டு படங்களில் நடித்தீர்கள்; இப்போது உங்கள் இடத்துக்கு கீர்த்தி சுரேஷ் வந்தது; வருத்தமாக இல்லையா?


அப்படி எல்லாம் எதுவுமில்லை. எனக்கு சிவாவுடன் நடிக்க பிடிக்கும். கூட நடிக்க வேண்டியது யார் என்பதை, அவர் தான் முடிவு செய்ய வேண்டும். மேலும், கதைக்கு பொருத்தமான ஹீரோயினை, இயக்குனர் தானே முடிவு செய்வார்.


பட விழாக்களுக்கு கூட, சிம்பிளா, மேக் - அப் இல்லாமல் வருவது ஏன்?


எனக்கு மேக் - அப் போடறது அவ்வளவாக பிடிக்காது. ஆனாலும், 'நீங்கள் நடிகை, இப்படி எளிமையாக வரக்கூடாது' என, பலரும் ஆலோசனை கூறுகின்றனர். இதனால், இப்போது, கொஞ்சம் மேக் - அப் போடுகிறேன்.


பெரிய நடிகர்களுக்கு சமமாக, நீங்களும் நிவாரண உதவி எல்லாம் அளிப்பது குறித்து...


தமிழகத்தில் தான் சம்பாதிக்கிறேன். இங்கு உள்ளவர்களுக்கு பாதிக்கப்படும்போது, அவர்களுக்கு உதவ வேண்டும் என நினைக்கிறேன். என்னால் முடிந்த அளவு, பண உதவி அளிக்கிறேன். இதற்கு என் குடும்பத்தினரும் ஒத்துழைக்கின்றனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in