ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஹாலிவுட்டில் பாஸ்ட் பியூரியஸ் வகையான கார் ரேஸ் படங்கள் அதிகம் வருகிறது. இவை பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகும் படங்கள். தமிழில் அதுபோன்ற ஒரு கார் ரேஸ் படத்தை குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கி வருகிறார்கள். படத்தின் பெயர் ஜெயிக்கப்போவது யாரு, பல படங்களுக்கு கிராபிக்ஸ் கலைஞராக பணியாற்றிய ஷக்தி ஸ்காட் இயக்கி அவரே நடித்தும் இருக்கிறார். ஏற்கெனவே இவர் அதிசய உலகம் என்ற குழந்தைகளுக்கான அனிமேஷன் படத்தை இயக்கியவர்.
பணத்துக்காக சென்னையில் பைக் ரேஸ் நடப்பதை போல சத்தமே இல்லாமல் கார் ரேசும் நடக்கிறதாம். இதை மையமாக வைத்து படத்தை உருவாக்கி வருகிறார்கள். அதை சட்டவிரோதமாக நடத்தும் வில்லனாக பவர் ஸ்டார் சீனிவாசன் நடிக்கிறார். மிஸ் பெங்களூர் டைட்டில் வென்ற வந்தனா ஹீரோயினாக நடிக்கிறார். படத்தின் இயக்குனரும், ஹீரோவுமான ஷக்தி ஸ்காட் நிஜத்திலும் ஒரு கார் பந்தய வீரர் என்பதால் இந்த படத்தை இயக்கி வருகிறாராம். 20 சதவிகித கிராபிக்ஸ் காட்சிகள் இருக்கிறதாம். ஒரு பாடல் காட்சியை முழுக்க முழுக்க கிராபிக்சிலேயே உருவாக்கி இருக்கிறார்களாம்.