பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
மெகா ஸ்டார் சிரஞ்சீவி கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிப்பதற்காக தயாராகி வருகின்றார். இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தமிழில் உருவான கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கை இயக்குனர் விவி விநாயக் இயக்குகின்றார். ஜூன் மாதத்தில் துவங்கவிருக்கும் இப்படத்தில் இரட்டை வேடங்களில் நடிப்பதற்காக தீவிர உடற்பயிற்சியில் சிரஞ்சீவி ஈடுபட்டு வருகின்றார்.
இந்நிலையில் அப்போலோ மருத்துவ குழுமங்களின் நிர்வாக அமைப்பின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் சிரஞ்சீவி கலந்து கொண்டார். 20,000 இதய அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்த மருத்துவர் விஜய் தீக்ஷித்திற்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்து கொண்ட சிரஞ்சீவி விஜய்யை பாராட்டி கௌரவித்தார். அப்போலோ மருத்துவ குழும நிறுவனர் பிரதாப் ரெட்டியின் பேத்தியான உபசேனாவை சிரஞ்சீவியின் மகனும் பிரபல நடிகருமான ராம் சரண் திருமணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.