ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
சமீபத்தில் வெளியான 'லீலா' படத்தின் பிரிண்ட்டும் வெளியான அடுத்த நாளே இணையதளத்தில் ஏற்றப்பட்டுள்ளதை பார்க்கும்போது, மலையாள சினிமாவில் சிலரை மட்டும் இந்த வீடியோ பைரசி மாபியாக்கள் குறிவைத்து தாக்குகிறார்களோ என நினைக்க வைக்கிறது. பிஜூ மேனன் நடித்துள்ள இந்தப்படத்தை இயக்குனர் ரஞ்சித் இயக்கியுள்ளதொடு அவரே தயாரித்தும் இருக்கிறார். இது அவரின் கனவுப்படம் வேறு.. இதற்கு முன் அல்போன்ஸ் புத்ரன் இயக்கிய பிரேமம்' படத்தின் சென்சார் காபி இணையதளத்தில் வெளியாகி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது ஞாபகம் இருக்கலாம்..
காரணம் லீலா படத்தின் தயாரிப்பாளர் ரஞ்சித்தும், பிரேமம் படத்தின் தயாரிப்பாளர் அன்வர் ரஷீத்தும் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் விநியோகஸ்தர் சங்கத்திற்கு எதிரான கருத்துக்களை கொண்டவர்கள் என்பதால் ஏதாவது உள்ளடி வேலை நடந்திருக்கலாம்.. இதுகுறித்து நடிகரும் தயாரிப்பாளருமான விஜய்பாபு கூறும்போது, “நாங்கள் கஷ்டப்பட்டு காசை, உழைப்பை கொட்டி படம் எடுக்கிறோம்.. இந்த வீடியோ பைரசிக்கார்ர்கள் எங்களது உழைப்பை அப்படியே கொள்ளையடிக்கிறார்கள்.. இவர்களை பிடித்து கடுமையான தண்டனையாக தூக்கில் போட வேண்டும்” என கொந்தளித்துள்ளார். இவர் ஏற்கனவே தமிழில் இருந்து வாங்கி வெளியிட்ட விஜய்யின் தெறி' படம் கூட இணையதளத்தில் வெளியானதால் நிறைய நஷ்டத்தை சந்தித்தவராம்.