ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மெகா ஸ்டார் சிரஞ்சீவி தனது 150வது படமாக தமிழ் சூப்பர்ஹிட் திரைப்படம் கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கவுள்ளார். இயக்குனர் வி.வி.விநாயக் இயக்கத்தில் உருவாகவிருக்கும் இப்படத்தின் பூஜை ஏப்ரல் 29 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் என இணையத்தில் பரவும் போஸ்டர் ரசிகர்களைக் வெகுவாக கவர்ந்துள்ளது. சிரஞ்சீவியின் மகனும் நடிகருமான ராம் சரண் லைக்கா புரொடக்ஷனுடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றார்.
கத்திலான்டோடு என இப்படத்திற்கு பெயரிட்டுள்ளனர். இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் சிரஞ்சீவி கூட்டணியில் உருவான தாகூர், ஸ்டாலின் போன்ற படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்ததால் கத்திலான்டோடு படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவான ரமனா படத்தின் தெலுங்கு ரீமேக்கான தாகூர் படத்தை இயக்குனர் வி.வி.விநாயக் இயக்கினார். இதனால் கத்திலான்டோடு படத்தை இயக்கும் வாய்ப்பும் விவி.விநாயக்கிற்கே கிடைத்துள்ளது.