ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பிரபல இயக்குனர் பி.வாசுவின் மகன் சக்திவேல் வாசு நடிக்கும் புதிய படம் 7 நாட்கள். இதில் அருக்கு ஜோடியாக நிகிஷா பட்டேல், அங்கனாராய் நடிக்கிறார்கள். இவர்களுடன் கணேஷ் வெங்கட்ராம், எம்.எஸ்.பாஸ்கர் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். எம்.எஸ் பிரபு ஒளிப்பதிவு செய்கிறார், விஷால் சந்திரசேகர் இசை அமைக்கிறார். கவுதம் என்ற புதுமுகம் இயக்குகிறார். கார்த்திக் மற்றும் கார்த்திகேயன் தயாரிக்கிறார்கள். படத்தின் பூஜை நேற்று நடந்தத. இதில் கலந்து கொண்ட பி.வாசு கூறியதாவது:
7 நாட்கள் திரைப்படத்தின் கதை மிக சிறந்த கதையாகும் , இப்படத்தின் இயக்குநர் கௌதம் இன்றைய டிரண்டுக்கு ஏற்றவாறு படம் இயக்க வேண்டும். இன்றைய இளைஞர்கள் குறும்படங்களை இயக்கிவிட்டு அதை தங்கள் திறமைக்கு சான்றாக எடுத்து கொண்டு வருகின்றனர். ஆனால் எங்கள் காலத்தில் அப்படி ஒரு சூழல் இருந்தது இல்லை. இயக்குநர் ஸ்ரீதரிடம் உதவி இயக்குநராக வேலை செய்யும் போது அவர் என்னை பெயரை சொல்லி கூப்பிடுவதே அரிதான ஒரு விஷயமாக இருந்தது. நான் இப்போது சக்திவேல் நடிக்கும் படத்தின் கதைகளை கேட்பது இல்லை. ஆனால் அவரை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்களை பற்றி மட்டும் நான் தெரிந்து கொள்வது உண்டு. என்றார் பி.வாசு.