ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தென்னிந்தியத் திரையுலகத்தைப் பொறுத்தவரை முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக இருப்பவர் தமன்னா. தெலுங்கில் தொடர்ந்து முன்னணியில் இருந்தவர், தமிழில் ஒரு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் முன்னணிக்கு வந்திருக்கிறார். தற்போது பிரபுதேவா ஜோடியாக தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் தயாராகும் ஒரு படத்திலும் நடிக்க ஆரம்பித்துள்ளார். இந்தப் படத்துடன் சென்னை எக்ஸ்பிரஸ், தில்வாலே படங்களை இயக்கிய ரோகித் ஷெட்டி இயக்க உள்ள புதிய படத்தில் ரன்வீர் ஜோடியாகவும் நடிக்க உள்ளார். தமிழில் விஜய் சேதுபதி ஜோடியாக தர்மதுரை படத்தில் நடித்து முடித்துள்ளார்.
தமன்னா நடித்து ஹிந்தியில் வெளிவந்த எந்தப் படமும் பெரிய வெற்றியைப் பெறவில்லை. “ஹிம்மத்வாலா, ஹம்ஷகல்ஸ்” ஆகிய இரண்டு படங்களும் படுதோல்விப் படங்களாகவே அமைந்தது. பிறந்து வளர்ந்த மாநிலத்தில் வெற்றி பெற முடியாமல் தவித்து வருகிறார். பிரபுதேவா படமும், ரன்வீர் படமும் அந்தக் குறையைப் போக்கும் என நம்பிக்கையுடன் இருக்கிறார்.