ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஸ்டையில் நாயகன் அல்லு அர்ஜுன் இயக்குனர் பொய்யபடி ஸ்ரீனு இயக்கத்தில் நடித்து வரும் அதிரடி ஆக்ஷன் திரைப்படம் அண்மையில் தணிக்கைக்குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. சரைனொடு படத்தைப் பார்த்த குழுவினர் இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இப்படத்தில் எம்.எல்.எவாக நடிக்கும் கேத்ரின் திரைஷாவிற்கு பாடிகார்டாக அல்லு அர்ஜுன் நடிக்கின்றார். நாயகியாக ராகுல் ப்ரீத்தி சிங் நடிக்கின்றார். ஈரம் படப்புகழ் நடிகர் ஆதி இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். பிரபல தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இசையமைப்பாளர் தமன் இசையில் இப்படத்தின் பாடல்கள் வெளிவந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி விசாகப்பட்டிணத்தில் உள்ள ஆர்கே பீச்சில் நடைபெறவுள்ளது. மேலும் இப்படம் ஏப்ரல் 22 ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.