ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் நடிகராக முடிவு செய்து கதாநாயகனாக முதலில் நடித்த படம் 'பென்சில்'. ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்திருக்கும் 'பென்சில்' படத்தை மணி நாகராஜ் இயக்கியுள்ளார். கல்சன் மூவீஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கும் நாயகன் ஜி.வி.யே இசையமைத்துள்ளார். பென்சில் படத்தின் தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட கடன் பிரச்சனை காரணமாக, ஒரு கட்டத்தில் பென்சில் படம் வளராமல் முடங்கிப்போனது. பாடல்கள், டிரைலர் ஆகியவை பல மாதங்களுக்கு முன்பே வெளியாகிவிட்டன.
2013 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட 'பென்சில்' படம் தடங்கல்களைத்தாண்டி ஒருவழியாக இந்த மாதம் ரிலீஸாகவிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், தணிக்கைக்கு அனுப்பப்பட்ட து பென்சில். ரொமான்ஸ் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படத்திற்கு சென்சாரில் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். யு சான்றிதழ் கிடைக்கவில்லை என்று அறிந்ததும் விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர்அதிபர்கள் உற்சகத்தை இழந்துவிட்டனர்.