ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
துல்கர் சல்மான் என்றதுமே அவரது முகத்தில் எந்நேரமும் மலர்ந்திருக்கும் புன்னகைதான் நமது ஞாபகத்திற்கு வரும். அப்படிப்பட்ட துல்கர், அழகு மயிலான 'பிரேமம்' புகழ் சாய் பல்லவியிடம் சிடுசிடு முகம் காட்டினார் என்றால் நம்புவதற்கு சிரமமாகத்தான் இருக்கும். ஆனால் அது உண்மைதான் என்பதை சமீபத்தில் வெளியான 'களி' பட ட்ரைலர் காட்டிக்கொடுத்துள்ளது. துல்கர்-சாய் பல்லவி நடிப்பில் சமீர் தாஹிர் இயக்கத்தில் அடுத்த வெள்ளிகிழமை வெளியாக இருக்கும் படம் தான் இந்த 'களி'.
இதில் துல்கர் சல்மானும் சாய்பல்லவியும் கணவனும் மனைவியுமாக நடித்திருக்கிறார்கள். படத்தின் ட்ரைலர் படி துல்கர் சல்மானுக்கு நுனிமூக்கில் கோபம் வரும். அவரது தோளில் ஹாயாக யாராவது தட்டினால் கூட சுள்ளென்று எரிந்து விழுவார். அவரது ஜோடியாக அவருக்கு மனைவியாக நடித்துள்ள சாய் பல்லவிக்கும் இதேநிலை தான். அருமையான ரொமான்டிக் படமாகவும் அதேசமயம் இளம் கணவன் மனைவிக்குள் ஏற்படும் பிணக்குகளை புதிய கோணத்தில் காட்டும் படமாகவும் இதை உருவாக்கியுள்ளாராம் இயக்குனர் சமீர் தாஹிர். வரும் மார்ச்-25ஆம் தேதி இந்தப்படம் வெளியாகிறது.