ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சிவகார்த்திகேயன் மற்றும் ஹன்சிகா நடிப்பில் இயக்குனர் திருக்குமரன் இயக்கிய மான் கரத்தே திரைப்படம் தமிழில் வெளிவந்து வெற்றி பெற்றது. இப்படம் தெலுங்கில் துந்தரி என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகின்றது. நடிகர் நர ரோஹித் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் நடிகை லதா ஹெட்டேக் நாயகியாக நடிக்கின்றார். இப்படத்தை நாகார்ஜுனாவுடன் இணைந்து தயாரிப்பாளர் அசோக் தயாரிக்கின்றார். குண்டேலோ கோதாரி படப் புகழ் இயக்குனர் குமார் நாகேந்திரா இப்படத்தை இயக்குகின்றார். இசையமைப்பாளர் சாய் கார்த்திக் இப்படத்திற்கு இசையமைக்கின்றார். படப்பிடிப்புகள் முடிந்து தணிக்கைக் குழுவினருக்கு இப்படம் திரையிடப்பட்டுள்ளது. இரண்டு மணி நேரம் ஓடும் இப்படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர். இப்படம் மார்ச் 11 ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.