ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட் நடிகர் அனில் கபூரின் மகள் சோனம் கபூர். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளிவந்த 'நீர்ஜா' படம் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தின் வசூலும் ரூ.50 கோடியை தாண்டியிருக்கிறது. மேலும் சோனம் கபூரின் நடிப்பும் எல்லோராலும் பாராட்டப்பட்டு வருகிறது. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சோனம் கபூரிடம், உங்கள் அப்பாவின் வாழ்க்கை வரலாறு படமாக உருவானால் அதில் நடிக்க எந்த ஹீரோ பொருந்துவார் என்று கேட்கப்பட்டது. அதற்கு, ரன்வீர் சிங் சரியான நபர் என்று சோனம் கபூர் கூறினார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது... ''நிஜ வாழ்க்கையில் நிறைய கஷ்டங்களை பார்த்தவர் என் அப்பா, பல வித்தியாசமான கதைகளிலும் நடித்திருக்கிறார். அவருடைய வாழ்க்கையை படமாக உருவாக்க இது தருணம் அல்ல, இன்னும் அதற்கான காலம் உள்ளது. என்னை பொறுத்தவரை ஒருவரது வாழ்க்கை வரலாற்று படம் உருவாக வேண்டுமானால், அவர்கள் அவர்களது இலக்கை அடைந்திருக்க வேண்டும். என் அப்பா இன்னும் உயரத்திற்கு செல்ல வேண்டும். இவை எல்லாவற்றையும் கடந்து என் அப்பாவின் வாழ்க்கை வரலாற்று படம் உருவானால் அதில் நடிக்க ரன்வீர் சிங் சரியான நபராக இருப்பார், ஏனென்றால் என் அப்பாவை போலவே ரன்வீர் சிங்கிடம் அதற்கான வேகம் உள்ளது என்று கூறியுள்ளார்.