ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
நடிகர் நானி நடித்து வரும் கிரிஷ்னகாடி வீர ப்ரேம காத எனும் திரைப்படம் பிப்ரவரி 12ல் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் ஹனு ரகவுபுடி இயக்கி வரும் இப்படத்தை 14 ரீல்ஸ் எண்டர்டையின்மென்ட் நிறுவனம் தயாரிக்கின்றது. இப்படம் குறித்து இயக்குனர் ஹனு கூறுகையில் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் கார் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தார். பல கார்களை தேடி பார்த்து ஆறு மாத கால தேடுதலுக்கு பின்னர் அக்காரை படக்குழுவினர் தேர்ந்தெடுத்துள்ளனர். மைசூரைச் சேர்ந்த பிரமுகர் ஒருவருக்கு சொந்தமான அந்த காரை இப்படத்தின் கலை இயக்குனர் அவினாஷ் மற்றும் அவரது குழுவினருடன் இணைந்து 35 நாட்களில் திரைப்படத்திற்கு ஏற்ற வகையில் உருவாக்கியுள்ளனர். இந்த காரை உருவாக்க தேவைப்பட்ட உபரி பாகங்கள் அமெரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்டதாகவும் இயக்குனர் ஹனு கூறியுள்ளார்.