ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
பிக்கப் நடிகர் என்கிற பட்டம் வாங்கும் அளவுக்கு அனைத்து நடிகைகளுக்கும் ஆர்யா செல்லப்பிள்ளை தான் என்றாலும், கடந்த சில மாதங்கள் முன்பு வரை ஆர்யாவின் திருமணம் குறித்த கிசுகிசு எழுந்ததெல்லாம் நயன்தாராவை முன்னிறுத்தி மட்டும் தான். அத்தனைக்கு அவர்கள் திக் பிரண்ட்ஸ்.. அதைத்தான் அவர்கள் பதிலாகவும் சொல்லி வருகிறார்கள்.
'வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க' படத்தில் கூட ஆர்யா தனக்கு பெண் தேடும் காட்சிகளில் எல்லாம், தனக்கு நயன்தாரா மாதிரி பெண் தான் வேணும் என்பார். இத்தனைக்கும் இவர்கள் 'பாஸ் என்கிற பாஸ்கரன்', ராஜாராணி' ஆகிய இரண்டு படங்களில் மட்டும் தான் ஜோடியாக நடித்தார்கள் 'ஆரம்பம்' படத்தில் இவர்கள் இருவருமே நடித்திருந்தாலும் ஒருவருக்கொருவர் ஜோடியாக நடிக்கவில்லை.
இந்தநிலையில் நயன்தாரா நடித்துள்ள இன்னொரு படத்தில் மிக முக்கியமான சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் ஆர்யா.. ஆனால் தமிழில் அல்ல.. மலையாளத்தில்.. ஆம், ஏ.கே.சாஜன் இயக்கத்தில் மம்முட்டி ஹீரோவாக நடித்து, வரும் வாரம் வெளியாகவுள்ள 'புதிய நியமனம்' படத்தில் தான் ஆர்யா நடித்திருக்கிறார். 'உறுமி', 'டபுள் பேரல்' படங்களை தொடர்ந்து மலையாளத்தில் ஆர்யா நடிக்கும் மூன்றாவது படம் இது. இதில் மம்முட்டியின் மனைவியாக, கதகளி டான்சராக நயன்தாரா நடித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மம்முட்டியுடன் ஆர்யா விருந்து சாப்பிடுவது போன்ற புகைப்படம் வெளியானபோதே யூகத்தை கிளப்பிய இந்த செய்தி தற்போது உண்மைதான் என உறுதியாகியுள்ளது.