மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் |
பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா நடிப்பில் 99வது திரைப்படமான டிக்டேடர் பொங்கலுக்கு திரைக்கு வந்தது. டிக்டேட்டர் படத்தில் பாலகிருஷ்ணா இரட்டை வேடத்தில் அஞ்சலி மற்றும் சோனல் சௌகனுடன் டூயட் பாடினார். அப்படத்தைத் தொடர்ந்து பாலகிருஷ்ணா நடிக்கவிருக்கும் திரைப்படம் அவரது 100வது திரைப்படம் என்பதால், அப்படத்திற்கான கதை மற்றும் இயக்குனர் தேடலில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
பாலகிருஷ்ணா நடித்த ஆதித்யா 999 எனும் டைம் ட்ராவெல் படத்தின் இரண்டாம் பாகத்தில் பாலகிருஷ்ணாவின் மகன் மோக்ஷக்னா நாயகனாக அறிமுகமாகவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், இயக்குனர் சங்கீதம் ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் பாலகிருஷ்ணாவே நடிப்பதாகக் கூறப்பட்டது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில் இயக்குனர் அணில் ரவிபுடி, பொய்யபடி ஸ்ரீனு உள்ளிட்ட இயக்குனர்களும் பாலகிருஷ்ணாவின் 100வது படத்தை இயக்குவதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
இந்நிலையில் பாலகிருஷ்ணாவின் 100வது படத்தில் அவரது மகன் மோக்ஷக்னா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. பாலகிருஷ்ணாவின் 100வது திரைப்படம் எப்படமாக இருந்தாலும் அப்படத்தில் அவரது மகனை அறிமுகப்படுத்த பாலகிருஷ்ணா திட்டமிட்டுள்ளாராம்.