ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஒரு அறிமுக நடிகருக்கு தனது முதல் படம் நூறு நாட்களை தாண்டி ஓடினால் அதைவிட பெரிய வரம் எதுவும் வேண்டுமா என்ன..? அப்படித்தான் மலையாளத்தில் மம்முட்டியின் மகன் என்கிற அறிமுகத்தோடு துல்கர் சல்மான் ஹீரோவாக களம் இறங்கிய, 'செகண்ட் ஷோ' படம் வெளியாகி நேற்றோடு நான்கு ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது.. இந்த நான்கு வருடங்களுக்குள் துல்கரின் வளர்ச்சி கிடுகிடுவென உயர்ந்து விட்டது.. ஆனாலும் ரசிகர்கள் இன்னும் 'செகண்ட் ஷோ' படத்தை கொண்டாடவே செய்கிறார்கள்.
இந்த நாளை நினைவூட்டு விதமாகவும், கொண்டாடும் விதமாகவும் தற்போது துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகிவரும் 'களி' (விளையாட்டு) படத்தை இயக்கி வரும் இயக்குனர் சமீர் தாஹிர் தங்களது படத்தின் பர்ஸ்ட் லுக்கை நேற்று வெளியிட்டுள்ளார். நீலாகாசம் பச்சக்கடல் சுவண்ண பூமி' படத்தை தொடர்ந்து இருவரும் இணையும் படம் இது. இந்தப்படத்தின் கதாநாயகியாக 'பிரேமம்' புகழ் சாய் பல்லவி நடிக்கிறார். இவருக்கும் இது இரண்டாவது படம்.. பர்ஸ்ட் லுக்கை பார்க்கும்போதே அருமையான ரொமாண்டிக் படம் என்பது தெரிகிறது.