ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
உய்யாலா ஜம்பாலா, சினிமா சூபிஸ்தா மாவ, குமாரி 21F என ஹாட்ரிக் வெற்றி கண்ட இளம் தெலுங்கு நடிகர் ராஜ் தருண் நடிப்பில் நேற்று வெளிவந்த சீடம்மா அண்டாலு ரமய்யா சிற்றாலு என்ற படம் முதல் தோல்வியைக் கொடுத்துள்ளது. மிகுந்த நம்பிக்கையுடன் இப்படத்தை எதிர்பார்த்த ராஜ் தருணிற்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. இப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் வழக்கமான கதையைத் தவிர வேறு எதுவும் படத்தில் இல்லை என கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் இப்படத்திற்கு எழுந்துள்ள எதிர்மறை விமர்சனங்களும் தோல்வியை உறுதி செய்துள்ளதால், ராஜ் தருண் சோகத்தில் மூழ்கியுள்ளாராம். ராஜ் தருண் தற்போது மஞ்சு மனோஜுடன் இணைந்து பஞ்சாபி படம் ஒன்றின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து வருகின்றார். இயக்குனர் நாகேஸ்வர ரெட்டி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் சோனாரிக்கா மற்றும் ஹீப்பா படேல் நாயகிகளாக நடிக்கின்றனர்.