ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
தமிழில் அலை, யாவரும் நலம் போன்ற படங்களை இயக்கிய விக்ரம் குமார் தெலுங்கில் இயக்கிய மனம் திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. இப்படத்திற்கு பின்னர் விக்ரம் குமார் தமிழில் நடிகர் சூர்யா நடிப்பில் 24 என்ற படத்தை இயக்கி வருகின்றார். அஞ்சான் படத்திற்கு பின்னர் சூர்யாவுடன் சமந்தா ஜோடி சேர்ந்திருக்கும் இப்படத்தின் போஸ்டர்கள் வெளிவந்து இப்படம் குறித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சூர்யா மூன்று வேடங்களில் நடித்துள்ள இப்படத்தில் நடிகை நித்யா மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள இப்படம் ஏப்ரல் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது. இப்படத்தின் தெலுங்கு பட விநியோக உரிமையை பெரும் தொகைக்கு நடிகர் நிதினின் தயாரிப்பு நிறுவனம் வாங்கியுள்ளது.