Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

மகாபாரத கேரக்டரில் மூன்றாவது முறையாக நடிக்கும் மம்முட்டி...!

26 ஜன, 2016 - 11:07 IST
எழுத்தின் அளவு:
Mammootty-acting-third-time-as-as-Mahabharatha-Character

மகாபாரத 'கர்ணன்' கதையை மையப்படுத்தி மலையாளத்தில் மம்முட்டி-பிருத்விராஜ் இருவர் தரப்பு இயக்குனர்களும் நடத்திவரும் குருசேத்திர போர் பற்றி கடந்த சில நாட்களாக தொடர்ந்து தகவல்களை கொடுத்து வருகிறோம். மலையாள ரசிகர்கள் பலரும் 'கர்ணன்' ஆக நடிக்க மம்முட்டியை விட பொருத்தமானவர் பிருத்விராஜ் தான் என நினைக்கின்றனராம். அதற்கு பிருத்விராஜின் வயதும் உடற்கட்டும் காரணமாக சுட்டிக்காட்டப்படுகின்றன. இது ஒரு பக்கம் இருக்க, அப்படியே மம்முட்டி இந்த கர்ணன் கேரக்டரில் நடித்தால் அது மகாபாரதத்தில் இருந்து இவர் ஏற்று நடிக்கும் மூன்றாவது கேரக்டராக இருக்கும் என்கிறார்கள் மலையாள சினிமா விமர்சகர்கள்.


25 வருடங்களுக்கு முன் சூப்பர்ஸ்டார் ரஜினி-மம்முட்டி இணைந்து நடித்த 'தளபதி' படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்தவர்கள் அனைவரும் அட.. மகாபாரத கதையை அப்படியே மாடர்னா எடுத்திருக்கிறார் மணிரத்னம் என சிலாகித்தார்கள். உண்மைதான். அந்தப்படத்தில் ரஜினி கர்ணனாகவும் மம்முட்டி துரியோதனன் கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர். அதன்பின் 2000ல் மலையாளத்தில் ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் வெளியான 'வலியேட்டன்' (பெரியண்ணன்) படத்தில் மம்முட்டியின் கதாபாத்திரம் தருமர் போலவே சித்தரிக்கப்பட்டிருந்தது. அதில் தந்தையை இழந்தபின் தனது நான்கு தம்பிகளை வளர்த்து ஆளாக்கும் மூத்த அண்ணனாக நடித்திருந்தார் மம்முட்டி. ஆக இப்போது நடிக்க இருக்கும் 'கர்ணன்' இவருக்கு மூன்றாவது கதாபாத்திரம் என அலசுகிறார்கள் மலையாள சினிமா விமர்சகர்கள்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in