ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழில் தற்போது ஜீவாவுடன் இணைந்து 'கவலை வேண்டாம்' என்ற படத்திலும், மகேஷ்பாபுவுடன் 'பிரம்மோற்சம்', பவன் கல்யாணுடன் 'சர்தார் கப்பார் சிங்' என்ற இரண்டு தெலுங்குப் படங்களிலும் நடித்து வருகிறார் காஜல் அகர்வால். சமீபத்தில் அவருடைய மிக கிளாமரான புகைப்படம் ஒன்று ஏற்படுத்திய பரபரப்புதான் பாலிவுட், டோலிவுட் தாண்டி கோலிவுட் வரை வந்திருக்கிறது. மும்பையில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் காஜல் அகர்வால் மிக கிளாமராக அணிந்து வந்த 'பின்க்' நிற கௌன் ஆடைதான் அத்தனை சலசலப்புக்கும் காரணம்.
காஜல் அகர்வாலைப் பொதுவாகவே அவருடைய தோற்றத்தை வைத்து சிலர் கிண்டலடித்துள்ளார்களாம். கொஞ்சம் குண்டாகவும், சரியான வளைவு, நெளிவுகள் இல்லாதவர் என்றும் சில மும்பை மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளார்கள். சில ஹிந்திப் படங்களில் நடித்தும் தொடர்ந்து பாலிவுட்டில் வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருபவர் காஜல் அகர்வால். அதனால், கடுமையான உடற்பயிற்சிகள் செய்து தன்னுடைய உடலை சரியான தோற்றத்தில் கொண்டு வந்ததைக் காட்டும் விதத்தில்தான் அந்த 'பின்க்' நிற உடை தரிசனமாம்.
அன்று நடந்த விழாவிலேயே காஜல் அகர்வால்தான் 'ஹாட்' டாபிக் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இப்போது காஜல் வழியை மற்ற சில நடிகைகளும் பின்பற்ற ஆரம்பித்துவிட்டார்கள்.