மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
டோலிவுட்டின் பவர் ஸ்டார் நடிகர் பவன் கல்யாண் நடித்து வரும் சர்தார் கபார் சிங் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவை மார்ச் இரண்டாவது வாரத்தில் நடத்த தயாரிப்பு நிறுவனமான ஈரோஸ் திட்டமிட்டுள்ளது. இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பவர் படத்தின் வாயிலாக வெற்றிப் பட இயக்குனர்கள் வரிசையில் இணைந்த பாபி சர்தார் படத்தை இயக்குகின்றார்.
பொங்கலுக்கு திரைக்கு வந்த சர்தார் படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்துள்ளது. நடிகை காஜல் அகர்வால் பவன் கல்யாணுக்கு ஜோடியாக இப்படத்தில் நடித்து வருகின்றார். தயாரிப்பாளர் சரத் மாரருடன் ஈரோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகின்றது. இப்படத்தை பொங்கலுக்கு திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் படப்பிடிப்புகளில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இப்படத்தின் வெளியீடு ஏப்ரல் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தெலுங்கு வருடப்பிறப்பான ஏப்ரல் 8 ஆம் தேதி இப்படம் திரைக்கு வரும் என கூறப்படுகின்றது.