Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

டாக்டர் பைஜூவின் டைரக்சனில் மீண்டும் காக்கி அணியும் இந்திரஜித்..!

22 ஜன, 2016 - 12:55 IST
எழுத்தின் அளவு:
Indrajith-again-in-Police-role

சமூகத்துக்கு பயன்படும் வகையிலான படங்களை மட்டுமே எடுப்பேன் என பிடிவாதமாக படங்களை இயக்கிவருபவர் மலையாள இயக்குனர் டாக்டர் பைஜூ. அதனாலேயே தேசிய விருது, மாநில அரசு விருது, சரவதேச திரைப்பட விருதுகள் என பலவற்றை வாரி குவித்து வருகிறார் பைஜூ. இவர் வாங்கிய விருதுகளின் பட்டியலை அப்டேட் பண்ணும் விக்கிபீடியாவே மிரண்டுபோய் நிற்கிறது. சரி.. விஷயத்துக்கு வருவோம், கடந்த வருட இறுதியில் என்டோசல்பான் கொடூரத்தை சொல்லும் 'வலிய சிறகுள்ள பட்சிகள்' படத்தை வெளியிட்ட இவர் தனது அடுத்த படத்தில் வனத்துறை மற்றும் அதுசார்ந்த மனித உரிமை மீறலை பற்றிய கதையை படமாக எடுக்கிறார்.


இதில் கதாநாயகனாக நடிப்பவர் இந்திரஜித். ஆம்... நடிகர் பிருத்விராஜின் அண்ணன் தான்.... ஏற்கனவே 'வீட்டிலுக்குள்ளே வழி', மற்றும் தேசியவிருது பெற்ற 'ஆகாசத்திண்டே நிறம்' ஆகிய படங்களில் இவருக்கும் டாக்டர் பைஜூவுக்கும் கெமிஸ்ட்ரி நல்லவிதமாக ஒர்க் அவுட் ஆகியிருந்தது. இந்த புதிய படத்தில் இந்திரஜித்துக்கு ரப் அன்ட் டப்பான போலீஸ் அதிகாரி வேடம். அதாவது 'லெப்ட் ரைட் லெப்ட்' படத்தில் ஏற்று நடித்தாரே அந்த மாதிரி. பிருத்விராஜ் போலீஸ் யூனிபார்முக்கு ரெஸ்ட் கொடுக்கும் நேரமெல்லாம் அதை எடுத்து அணிந்து கொள்வார் இந்திரஜித். தற்போது ராஜேஷ் பிள்ளை டைரக்சனில் இவர் நடித்து வரும் 'வேட்ட' படத்திலும் இவருக்கு போலீஸ் கமிஷனர் வேடம் தானாம்.


Advertisement
மலையாளத்திலும் குழந்தைகளுக்கான படத்தில் நடித்த அமலாபால்..!மலையாளத்திலும் குழந்தைகளுக்கான ... 'கர்ணன்' படத்தை இயக்காமல் ஷாஜி கைலாஷ் பின்வாங்கியது ஏன்..? 'கர்ணன்' படத்தை இயக்காமல் ஷாஜி ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Embiran
    Tamil New Film Saamy 2
    • சாமி 2
    • நடிகர் : விக்ரம் ,
    • நடிகை : கீர்த்தி சுரேஷ்
    • இயக்குனர் :ஹரி
    Tamil New Film Gorilla
    • கொரில்லா
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ஷாலினி பாண்டே
    • இயக்குனர் :டான் சாண்டி
    Tamil New Film Imaikkaa nodigal
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in