மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
தெலுங்கு திரை உலகின் பிரபல நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் நடித்துள்ள நாணாக்கு பிரேமதோ திரைப்படம் பொங்கலுக்கு திரைக்கு வருகின்றது. இயக்குனர் சுகுமார் இயக்கியுள்ள இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவு பெற்று ஜனவரி 12 ஆம் தேதி சிறப்பு திரையிடலுக்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.
இந்நிலையில் இப்படத்தின் போஸ்டருக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. முஸ்லீம் சமூகத்தினரின் மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக நாணாக்கு பிரேமதோ படத்தின் போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளதாக முஸ்லீம் அமைப்புகள் மாநில சிறுபான்மையினர் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளனர். மேலும் படத்திற்கு எதிராக புகார் கொடுக்கவில்லை என்றும் அப்படத்தில் இடம்பெற்றுள்ள போஸ்டரை மாற்ற வேண்டும் என புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.