14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
தெலுங்கு திரை உலகின் பிரபல நடிகர் நாகார்ஜுனா நடிப்பில் பொங்கலுக்கு திரைக்கு வரும் திரைப்படம் சொக்கடே சின்னி நயன். திகில் திரைப்படமான இப்படத்தில் நாகார்ஜுனா பயமுறுத்தும் பேயாகவும் மனோதத்துவ மருத்துவர் என இரு மாறுபட்ட வேடங்களில் நடித்துள்ளார். அன்னபூர்ணா ஸ்டூடியோஸ் தயாரிப்பில் இப்படத்தை இயக்குனர் கல்யாண் கிருஷ்ணா இயக்கியுள்ளார். திகில் திரைப்படமாக இப்படம் உருவாக்கப்பட்டிருந்தாலும் காதல் மற்றும் நகைச்சுவை காட்சிகளுக்கும் இப்படத்தில் பஞ்சம் இருக்காது என இயக்குனர் கூறியுள்ளார். மேலும் நாகார்ஜுனாவின் ஸ்டைலில் மாறுபட்ட திகில் திரைப்படமாக இப்படம் அமையும் என இயக்குனர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இப்படம் ஜனவரி 15 ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.