ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தெலுங்கு திரை உலகின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் தங்கை கணவரும் வளர்ந்து வரும் நடிகருமான சுதீர் பாபு நடித்துள்ள பலே மஞ்சி ரோஜு படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று ஐதரபாத்தில் நடைபெற்றது. மகேஷ் பாபு தனது மகன் கௌதம் கிருஷ்ணாவுடன் கலந்து கொண்டு இவ்விழாவினை சிறப்பித்தார். ராணா, ரெஜினா, சுதீர் பாபு மற்றும் பலே மஞ்சி ரோஜு படக்குழுவினரும் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய மகேஷ் பாபு, தெலுங்கு திரை உலக ரசிகர்கள் எப்போதுமே புதிய திறமைகளை ஊக்குவிக்க கூடியவர்கள் அந்த வகையில் இப்படம் ரசிகர்களை கவரும் என்பது டிரைலரிலேயே தெரிகிறது. இப்படத்தின் வெற்றிக்கு பின்னர் சுதீர் பாபுவும் நட்சத்திர அந்தஸ்து கொண்ட நடிகராகி விடுவார் என கூறினார். மேலும் இப்படம் வெற்றி அடைய அறிமுக இயக்குனர் ஸ்ரீராம் ஆதித்யா மற்றும் தயாரிப்பாளர்களுக்கு மகேஷ் பாபு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
மோசகலக்கு மோசகடு, கிருஷ்ணம்மா களிபிண்டி இட்டரிணி போன்ற படங்களைத் தொடர்ந்து சுதீர் பாபு நடித்துள்ள பலே மஞ்சி ரோஜு படத்தை அறிமுக இயக்குநர் ஸ்ரீராம் ஆதித்யா இயக்கியுள்ளார். இப்படத்தை விஜய் குமார் ரெட்டி மற்றும் சசிதர் ரெட்டி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தில் சுதீர் பாபுவிற்கு ஜோடியாக வாமிகா நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் வெளிவந்து ரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ள நிலையில் பாடல்கள் மற்றும் முன்னோட்ட காட்சிகள் வெளிவந்து இப்படம் குறித்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.