ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இயக்குனர் ராஜேஷ்.எம், தான் லவ்வர் பாய் ஹீரோக்களை காமெடியனாக்கி முழுநீள காமெடி படம் எடுக்கும் டிரண்டை உருவாக்கியவர். இவரது படங்களுக்கு நீளமான தலைப்புகள் தான் வைப்பார். ''சிவா மனசுல சக்தி'', ''பாஸ் என்கிற பாஸ்கரன்'', ''ஒரு கல் ஒரு கண்ணாடி'', ''ஆல் இன் ஆல் அழகுராஜா'', ''வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க'' இப்படி நீளமான தலைப்பு கொண்ட படங்கள் வரிசையில் அடுத்து இயக்க இருக்கும் புதிய படத்திற்கு ''கடவுள் இருக்கான் குமாரு'' என்று தலைப்பு வைத்திருக்கிறார்.
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க செயலாளர் அம்மா கிரியேஷன் டி.சிவா தயாரிக்கிறார். ஜி.பி.பிரகாஷ்குமார் ஹீரோவாக நடிக்கிறார். படத்தின் ஹீரோயின் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது. இதுவும் ராஜேஷ்.எம்மின் தனித்த பாணியிலான காமெடி கதை. ஒரே மாதிரியாக படம் எடுக்கிறார். தன் படத்தையே தானே காப்பி அடிக்கிறார் என்கிற விமர்சனங்கள் ராஜேஷ் மீது உண்டு. அதனை மாற்றும் விதமாக திரைக்கதை அமைத்து வருகிறார்.
சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி என தொடர்ந்து ஹாட்ரிக் ஹிட் கொடுத்த ராஜேசுக்கு ஆல் இன் ஆல் அழகுராஜாவும், வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்களும் தோல்வி படங்களாக அமைந்தது. ஹாட்ரிக் பிளாஃபை தவிர்க்க ஒரு ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் ராஜேஷ். அதற்காக கடுமையாக உழைத்து வருகிறார்.