ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கிரிக்கெட் வீரராக இந்தியா முழுக்க உள்ள ரசிகர்களுக்கு ஸ்ரீசாந்த் நன்கு அறிமுகமானவர்.. அந்தவகையில் மலையாளத்தில் அறிமுகமாகும் அவரது படம், மற்ற மூன்று தென்னிந்திய மொழிகளிலும் ஒரேநேரத்தில் தயாராகவுள்ளது. ஸ்ரீசாந்த்துக்கு ஏற்றவாறு கிரிக்கெட்டை மையப்படுத்தி இந்தப்படத்தின் கதையை பிரகாஷ் என்பவர் எழுத, சனா யோதிரெட்டி என்பவர் இயக்குகிறார். இப்போது இந்தப்படத்தின் கதாநாயகியாக தெலுங்கு நடிகையான ஷான்வி ஸ்ரீவத்சவாவை ஒப்பந்தம் செய்துள்ளார்களாம்.
இவர் ஏற்கனவே தெலுங்கில் 'அட்டா' மற்றும் 'ரௌடி' ஆகிய படங்களில் நடித்தவர்.. அறிமுக நடிகர் தான் என்றாலும் பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்துடன் நடிக்க கசக்குமா என்ன..? அதனால் உடனே ஒகே சொல்லிவிட்டாராம். படத்தில் கிரிக்கெட் வீரராகவே நடிக்கும் ஸ்ரீசாந்தை விரட்டி விரட்டி காதலித்து அவரை சிக்கலில் மாட்டிவிடும் கேரக்டராம் இவருக்கு.. இவர் தவிர தனது மகனுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் தாயாகவும், அவனை ஒரு கிரிக்கெட் வீரனாக மாற்றும் கோச்சாகவும் மிகவும் சக்திவாய்ந்த மாடர்ன் அம்மா கேரக்டரில் ஸ்ரீசாந்துக்கு அம்மாவாக நடிக்கிறாராம் ரம்யா கிருஷ்ணன்.