மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
நலன் குமாரசாமி இயக்கத்தில், விஜய்சேதுபதி நடித்துள்ள 'காதலும் கடந்துபோகும்' படம் வளர்ந்ததே தெரியாமல் சத்தமில்லாமல் படப்பிடிப்பை முடித்துவிட்டார்கள். காதலுக்கும் நட்புக்கும் சரிசம வாய்ப்பு கொடுத்து உருவாகி இருக்கும் இந்தப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார் மலையாளத்தில் இருந்து தமிழுக்கு அறிமுகமாகியிருக்கும் மடோனா செபாஸ்டின். மலையாளத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி இன்னும் கூட வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் 'பிரேமம்' படத்தின் மூன்று நாயகிகளில் ஒருவர் தான் இந்த மடோனா.
'பிரேமம்' படம் தான் அவரது முதல் படம். என்றாலும் அது ரிலீசாவதற்கு முன்பே இவர் எப்படி விஜய்சேதுபதியின் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் என்றால் நலன் குமாரசாமியும், 'பிரேமம்' படத்தை இயக்கிய அல்போன்ஸ் புத்ரனும் குறும்படம் இயக்கிய காலத்தில் இருந்தே நண்பர்கள்.அதுதான் இவரை தமிழுக்கு அழைத்து வந்துவிட்டார்கள்.. கிட்டத்தட்ட 50 நாட்கள் சென்னையில் தங்கி படப்பிடிப்பில் கலந்துகொண்ட மடோனாவுக்கு தமிழ்சினிமா புது அனுபவத்தை தந்துள்ளதாம். ஷூட்டிங் ஸ்பாட்டில் தமிழ் தடுமாறியபோது விஜய்சேதுபதி தான் உதவிக்கரம் நீட்டினார் என கூறும் மடோனா தற்போது மலையாளத்தில் திலீப்புடன் 'கிங் லயர்' என்கிற படத்தில் நடித்து வருகிறார்.