வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது |
வானியல் ஆராய்ச்சியை மையமாக கொண்ட கிராவிட்டி படம் ஆஸ்கார் விருதை வென்று உலகமெங்கும் ரசிகர்களுக்கு விருந்து அளித்தது. கிராவிட்டி படத்தில் கதையின் நாயகியாக நடித்தவர் சான்ட்ரா புல்லக். ஹாலிவுட்டில் புகழ்பெற்ற நடிகை. இவருக்கு வயது 51. இவர் தற்போது அவரின் நீண்ட நாள் பாய்ஃப்ரெண்டான ப்ரயன் ராண்டாலை திருமணம் செய்யப்போவதாக தகவல்கள் கசிந்துள்ளன.
சான்ட்ராவின் நெருங்கிய நண்பர் மற்றும் நடிகருமான ஜார்ஜ் க்ளூனிக்கு சொந்தமான லேக் கோமோ வில்லாவில் இவர்களது திருமணம் விரைவில் நடைபெற இருப்பதாகவும் அந்த தகவல் தெரிவிக்கின்றது. ஏற்கனவே இருமுறை திருமணமான சான்ட்ராவிற்கு இந்த முறை திருமணம் நடந்தால், மூன்றாவது திருமணமாகும். நம்ம ஊர்ல மூணு முடிச்சு போடுவாங்க, இங்க மூணு பேர் மோதிரம் போடுறாங்க.