மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
அங்காடிதெரு படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகை அஞ்சலி தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வளர்ந்து வந்த நேரத்தில் இயக்குனர் களஞ்சியமுடன் உருவான சில பிரச்சனைகள் அவரது வளர்ச்சியை பாதிக்கும் வகையில் செய்தன. இருப்பினும் அவற்றிலிருந்து மீண்டு வந்து ஜெயம் ரவியுடன் இணைந்து அப்பாடக்கர் படத்தில் நடித்தார் அஞ்சலி. தமிழில் அடுத்து அஞ்சலி நடிப்பில் மாப்பிள சிங்கம் திரைப்படம் வெளிவரவுள்ளது. இதே போல் தெலுங்கில் நடிகர் பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக அஞ்சலி நடித்துள்ள டிக்டேட்டர் திரைப்படம் பொங்கலுக்கு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் சங்கராபரனம் என்ற தெலுங்கு படத்தில் நடிகை அஞ்சலி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக ஏற்கனவே கூறப்பட்டது. அப்படத்தில் அஞ்சலி ஏற்றுள்ள கதாபாத்திரம் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன. இப்படத்தில் பெண் ரௌடியாக நடித்துள்ள அஞ்சலி அதிரடியாக நடனமும் ஆடியுள்ளாராம். துப்பாக்கி ஏந்திய பெண் ரௌடியான அஞ்சலியின் நடனத்துடன் கூடிய இப்படத்தின் டீசர் வெளிவந்து ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளன. இயக்குனர் உதய் நந்தவனம் இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர் நிகில் நாயகனாகவும் நடிகை நந்திதா நாயகியாகவும் நடித்துள்ளனர். டிசம்பர் 4 ஆம் தேதி இப்படம் வெளிவரவுள்ளது.