ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட்டின் வெற்றிகரமான ஜோடியாக வலம் வந்தவர்கள், ஷாரூக் கானும், கஜோலும். பாஸிகர், கரண் அர்ஜுன், தில்வாலே துல்ஹானியா லே ஜாயேங்கே உள்ளிட்ட பெரும்பாலான படங்கள், பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டடித்தவை. ஐந்து ஆண்டுகளுக்கு பின் இந்த ஜோடி, தில்வாலே என்ற படம் மூலம் மீண்டும் பாலிவுட் ரசிகர்களுக்கு விருந்து படைக்க காத்திருக்கிறது. இதுகுறித்து ஷாரூக் கான் அளித்துள்ள பேட்டி:
ஐந்து ஆண்டுகளுக்கு பின், கஜோலுடன் ஜோடி சேர்ந்துள்ளீர்கள்; எப்படி இருந்தது இந்த அனுபவம்?
உண்மையைச் சொல்கிறேன். ஒவ்வொரு படத்தில் நடிக்கும் போதும், இதில் கஜோல் நடித்திருந்தால் நன்றாக இருக்குமே என்ற நினைப்பு வரும். கஜோலை மிஸ் பண்ணுவதாக நினைப்பேன். இந்த படத்தில் நடிப்பதற்காக, தொடர்ச்சியாக, 150 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருந்தார். தன் குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டு, படப்பிடிப்பில் பங்கேற்றார். இதை, எங்களுக்காக அவர் செய்த மிகப் பெரிய தியாகம் என்றே கருதுகிறேன்.
திருமணத்துக்கு பின், கஜோல் அதிக படங்களில் நடிக்கவில்லை; இதுகுறித்து உங்கள் கருத்து?
கஜோல், மிகச் சிறந்த நடிகை. அவர், அதிக படங்களில் நடிக்கவில்லை என்ற வருத்தம் எனக்கு உண்டு. ஆனால், அது, அவரது தனிப்பட்ட விருப்பம். என்னைப் போன்ற நடிகர், நடிகையர், அதிக படங்களில் நடித்து, அதிகம் சம்பாதிக்க வேண்டும் என நினைக்கிறோம். ஆனால், கஜோல், காசு,
பணத்தை முக்கியமாக கருதுவது இல்லை. ஆயிரத்தில் ஒருவர் தான், இது போல் இருப்பர்.
கஜோலுடன் முதல் முதலாக ஜோடி சேர்ந்த அனுபவம் குறித்து கூறுங்களேன்...?
பாஸிகர் படத்தில் தான், கஜோலுடன் முதன் முறையாக நடித்தேன். அப்போது, அமீர் கான், கஜோலுடன் நடிக்க விரும்பி, என்னிடம் கருத்து கேட்டார். அய்யய்யோ... அந்த பொண்ணுக்கு நடிக்கவே தெரியவில்லை. ரொம்ப மோசம் என, அமீர்கானிடம் கூறினேன். ஆனால், படம் வெளியாகி, திரையில் கஜோலை பார்த்ததும் அசந்து விட்டேன். திரையில், ரசிகர்களை வசியப்படுத்தும் வித்தையை கஜோல், நன்றாகவே தெரிந்து வைத்திருந்தார்.
மற்ற நடிகையருக்கு முன் மாதிரியாக, கஜோல் திகழ்வதாக நினைக்கிறீர்களா?
நிச்சயமாக நினைக்கிறேன். என் மகள் சுஹானா, நடிக்க விரும்புகிறாள். நான், அவளிடம், முதலில், கஜோலை பார்த்து, நடிக்க கற்றுக் கொள்; அப்புறம் நடிக்கலாம் என்றேன். அந்த அளவுக்கு மிகச் சிறந்த நடிகை கஜோல். திரையில் கஜோலை பார்ப்பதற்கும், நேரில் பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. என் மகளுக்கு மட்டுமல்ல; தற்போது உள்ள முன்னணி நடிகையருக்கும் சிறந்த முன் உதாரணமாக கஜோல் திகழ்கிறார்.