ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ரஜினி நடிக்கும் கபாலி படத்தில் நடிகை ராதிகா அப்தேவும் நடிக்க உள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன் கூறினோம். கபாலி படத்தின் சூட்டிங்கில் எப்போது கலந்து கொள்ள போகிறீர்கள் என ராதிகா அப்தேவிடம் கேட்டோம். அதற்கு அவர், நானும் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறேன். டிசம்பர் 1 ம் தேதியில் இருந்து கபாலி சூட்டிங்கில் கலந்து கொள்ளப் போகிறேன். அது மலேசியாவிலா அல்லது வேறு எங்காவது என இதுவரை சரியாக தெரியவில்லை என்றார். கபாலி படத்தில் ரஜினியின் மனைவியாக ராதிகா அப்தே நடிக்கிறார். இந்த படத்தில் ரஜினி, தாதா கேரக்டரில் நடிக்கிறாராம். கபாலி படத்தின் 70 சதவீத சூட்டிங் முடிந்து விட்டதாம். இப்படத்தின் முதல்கட்ட சூட்டிங் சமீபத்தில் தான் சென்னையில் நிறைவடைந்தது. இந்தியில் ஷாருக்கான் நடித்துள்ள ஃபேன் படமும், தமிழில் ரஜினி நடிக்கும் கபாலி படமும் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் ரிலீசாக உள்ளது. இரண்டு பெரிய ஸ்டார்களின் படமும் ஒரே சமயத்தில் ரிலீசாக உள்ளதால், இரண்டு படங்களுக்கும் இடையே கடுமையான போட்டி இருக்கும் என கூறப்படுகிறது.