Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

'ருத்ரமாதேவி' - முதல் நாள் வரவேற்பு எப்படி ?

10 அக், 2015 - 17:44 IST
எழுத்தின் அளவு:
First-day-report-of-Rudhramadevi

'பாகுபலி' படத்தின் மாபெரும் வெற்றி, வசூலுக்குப் பிறகு தெலுங்குத் திரையுலகில் பலரும் எதிர்பார்த்த ஒரு திரைப்படம் 'ருத்ரமாதேவி'. தெலுங்கில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குனர் குணசேகர் இயக்கத்தில் அனுஷ்கா, ராணா டகுபதி, அல்லு அர்ஜுன், பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடித்துள்ள படம் இது. நேற்று தெலுங்கு பேசும் இரண்டு மாநிலங்களிலும், உலகம் முழுவதும் இப்படம் வெளியானது.


விமர்சன ரீதியாக படம் மிகச் சிறப்பாக இல்லை என்று சொல்லப்பட்டாலும் படத்தின் விஷுவல் காட்சிகளும், இளையராஜாவின் பின்னணி இசையும், அல்லு அர்ஜுனின் சிறப்புத் தோற்றமும் படத்தைத் தாங்கிப் பிடிப்பவையாக உள்ளது என்கிறார்கள். அதே சமயம் 'ருத்ரமாதேவி' என நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ள படத்தில் அல்லு அர்ஜுனின் கதாபாத்திரம் படத்தின் முதன்மைக் கதாபாத்திரமான 'ருத்ரமாதேவி'யின் முக்கியத்துவத்தைக் குறைத்து விடுகிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.


'பாகுபலி' படத்தை இயக்கிய ராஜமௌலியும் 'ருத்ரமாதேவி'யைப் பற்றிப் பாராட்டிப் பேசியிருந்தாலும், படத்தின் திரைக்கதை முடங்கிப் போகும் சூழ்நிலை வரும் போது அல்லு அர்ஜுனின் வரவு படத்தைக் காப்பாற்றியுள்ளது என்ற ரீதியில் விமர்சித்துள்ளதும் குறிப்பிடப்படுகிறது. 'ருத்ரமாதேவி' பற்றி ராஜமௌலியின் கமெண்ட்டும் படத்திற்கு மைனசாக இருப்பதாகவே சிலர் கருதுகிறார்களாம். 'பாகுபலி' படத்தின் பட்ஜெட்டையும், 'ருத்ரமாதேவி' படத்தின் பட்ஜெட்டையும் ரசிகர்கள் கருத்தில் கொண்டு பார்க்க வேண்டும் என்று டோலிவிட்டிலிருந்து சிலர் குரல் எழுப்புகின்றனர்.


விமர்சனங்கள் பல விதங்களில் இருந்தாலும் நேற்று முதல் நாள் மட்டும் உலகம் முழுவதும் சுமார் 20 கோடி வரை வசூலித்திருக்கும் என்கிறார்கள். தமிழில் 'ருத்ரமாதேவி' அடுத்த வாரம் 16ம் தேதி வெளியாக உள்ளது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in