ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருந்த ஜி.வி.பிரகாஷ்குமார் பென்சில் படத்தின் மூலம் ஹீரோவானார். அந்தப்படம் வெளிராமல் முடங்கிப்போனநிலையில் இரண்டாவதாக அவர் நடித்த 'டார்லிங்' படம் அவருக்கு அறிமுகப்படமாக அமைந்தது. டார்லிங் பேய்ப்படமாக இருந்ததால் வெற்றியடைந்தது. ஜி.வி.பிரகாஷ்குமாரரின் அடுத்தப் படமான 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படமோ பிட்டுப்படம் ரேன்ஜுக்கு ஆபாசமாக இருந்தது. அதனால் விமர்சன ரீதியாக கடும் கண்டனத்தை இப்படம் சந்தித்தது. அதே சமயம், வசூல்ரீதியாக இப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்திருக்கிறது.
இன்னொரு பக்கம், டீன்ஏஜ் இளைஞர்களின் கனவு நாயகனாகிவிட்டார் ஜி.வி.பிரகாஷ்குமார். 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படம் முழுக்க முழுக்க இளைஞர்கள் மட்டுமே வந்து பார்க்கும் வகையில் அமைந்த 'ஏ' சர்டிஃபிகேட் படமாக இருந்தும் வெற்றி பெற்றதால், மீண்டும் அதேபோன்ற படத்தில் நடிப்பார் என்ற எண்ணத்தில் பலரும் அவரிடம் கதை சொல்ல முயற்சி செய்கின்றனர். இதை அறிந்த ஜி.வி.பிரகாஷ்குமார் அதிரடியாக தனது பாதையை மாற்ற முடிவு செய்துவிட்டார்.
தற்போது 'கெட்ட பையன்டா கார்த்தி', 'புரூஸ் லீ' ஆகிய இரண்டு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். இதில் 'கெட்ட பையன்டா கார்த்தி' படத்திற்கு வெற்றிமாறன் திரைக்கதை அமைக்க, வசனம் எழுதுகிறார் அட்லீ. இப்படத்தின் மூலம் ஃபேமிலி ஆடியன்ஸிடமிருந்து தனக்கு பெரிய வரவேற்பு கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் ஜி.வி.
ஜி.வி. நடிக்கும் இன்னொரு படமான 'புரூஸ் லீ'யை முழுக்க முழுக்க குழந்தைகளைக் கவரும் வகையில் உருவாக்கவிருக்கிறார்களாம். ரஜினியின் நடிப்பில் வெளிவந்த 'தில்லு முல்லு' ஸ்டைலில் ஜி.வி.யின் 'புரூஸ் லீ' படம் இருக்குமாம். குடும்பத்தை கவரும்படியான படத்தில் நடித்தால் என்ன.. குழந்தைகளை கவரும்படியான படங்களில் நடித்தால் என்ன... ஜி.வி.பிரகாஷ் படம் என்றால் பிட்டு படம் என்று பேர் வாங்கிக் கொடுத்துவிட்டதே 'த்ரிஷா இல்லனா நயன்தாரா'.